இந்திய அணி முதல் இன்னிங்ஸில் காட்டிய அதிரடிக்கு சற்றும் சளைக்காமல், அயர்லாந்து அணியும் பதிலடி கொடுக்க, 40 ஓவர்களில், 446 ரன்கள் என நான்கு மணிநேர ரன்மழையில் டப்லின் நனைந்தது. கடைசியாக இறுதி ஒவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கான வெற்றி, ரன் கணக்கிலா, விக்கெட் அடிப்படையிலா என்ற இறுமாப்புடைய கேள்விதான் ரசிகர்களிடம் முன்னதாக இருந்தது. ஆனால், எல்லைகளைத் தாண்டியும், அயர்லாந்து தன் கொடியை உயர்த்தியது.
IND vs IRE : இறுதிப்பந்து வரை அச்சுறுத்திய அயர்லாந்து; தொடரை வென்ற இந்தியா |match report of india vs ireland 2nd t20
Share