டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்திருக்கின்றன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார். அதில், “ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி இந்திய அணிதான்.
சூர்யகுமார் தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்கள், அதிக அழுத்தமான சூழல்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட வீரர்களாக இருக்கின்றனர்.
இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் தற்போதைய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் ஒன்று” என்று தெரிவித்திருக்கிறார்.