யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏன்? நீதிபதி கூறிய காரணம் என்ன?

Share

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாட்டைத் தடுக்கும் முயற்சியாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது. இந்த விதிகள் சிறிது காலமாக ஒரு தரப்பின் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

பிபிசி செய்தியாளர் உமாங் போடார் அளித்த தகவல்களின்படி, யுஜிசி ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026’இன் விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விதிகளை மறுவரைவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது, அதுவரை அந்த விதிகள் செயல்படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்படும்.

இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாகுபாட்டைத் தடுக்க, யுஜிசி ஜனவரி 13, 2026 அன்று புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிமுறைகள் 2012 இல் இதே நோக்கத்திற்காக இருந்த பழைய விதிமுறைகளை மாற்றுகின்றன.

உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

ஜனவரி 13 அன்று யுஜிசி திய விதிகளை வெளியிட்டது, அவை பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டன, இருப்பினும் அரசாங்கம் 'இவற்றை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என்று கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜனவரி 13 அன்று யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டது, அவை பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டன, இருப்பினும் அரசாங்கம் ‘இவற்றை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியிருந்தது.

பிபிசி நிருபர் உமாங் போடார் அளித்த தகவல்களின்படி, “2012 இல் யுஜிசி உருவாக்கிய விதிகள் மட்டுமே தற்போதைக்கு பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com