தொழில்நுட்பம் மூலம் மூளையை மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

Share

தொழில்நுட்பம் மீண்டும் மூளையை செயல்பட வைக்க உதவுமா?

பட மூலாதாரம், Jonathan Kitchen via Getty Images

வாங்கவேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியலை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா? இல்லையென்றால், முக்கிய கூட்டம் ஒன்றுக்கு வரவேண்டிய விருந்தினர்களின் பெயர்களை நினைவில் வைக்க வேண்டுமா?

பலரும் தங்கள் மூளை சிறப்பாக செயல்பட சில தந்திரங்களை கையாள்கின்றனர், இது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முறையாகும்.

ஆனால், மின்னணு ரீதியாக நம் மூளைக்கு ஒரு உந்துதலை அளிக்கும் வகையில் நாம் ஹார்டுவேர் – அதாவது ஏதேனும் சாதனங்களை உபயோகிக்க முடியுமா?

இதுவரை சில குறிப்பிட்ட நரம்பியல் பிரச்னைகளில் மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்மூளை தூண்டல் சிகிச்சை முறை (Deep brain stimulation – DBS) ஓர் உதாரணம். இது, ஒருவரின் இயக்கத்தை பாதிக்கும் பார்கின்சன் போன்ற நோய்களில் இந்த சிக்கலான முறையின் மூலம் பல ஆண்டுகளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com