மார்க் டலி: பிபிசி இந்தியாவின் முன்னாள் செய்தியாளர் காலமானார் – எமர்ஜென்சியின் போது இவரின் அனுபவம் என்ன?

Share

சர் மார்க் டலி பிபிசியின் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர் மார்க் டலி பிபிசியின் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவர்.

பிபிசி இந்தியாவின் முன்னாள் செய்தியாளர் சர் மார்க் டலி புது டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருடைய முன்னாள் சகாவான சதீஷ் ஜேக்கப் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

அவருக்கு வயது 90. மார்க் டலி பிபிசியில் இருந்து விலகிய பின்னர் சுயாதீன செய்தியாளராக பணியாற்றி வந்தார்.

2009ம் ஆண்டு பிபிசி ஹிந்தி சேவையின் ‘ஏக் முலாகத்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியில், தன் வாழ்க்கையின் அதிகம் அறியப்படாத பக்கங்கள் குறித்து மார்க் டலி வெளிப்படையாக பேசினார்.

பிபிசி ஹிந்தி சேவையின் அப்போதைய இந்திய ஆசிரியரான சஞ்சீவ் ஸ்ரீவத்சவா மார்க் டலியை இதற்காக நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மார்க் டலி அளித்த பதில்கள்:

நாங்கள் இதழியல் துறையில் பணியாற்ற தொடங்கிய காலகட்டத்தில், இத்துறையில் சாதிக்க வேண்டும் என முயற்சிப்பவர்கள் ஒன்று உங்களுடனோ அல்லது அருண் ஷோரியுடனோ ஒப்பிடப்படுவார்கள். அதுகுறித்து எப்படி உணருகிறீர்கள்?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com