'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' – அமைச்சர் ஐ.பெரியசாமி

Share

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நான் அமைச்சராகப் பொறுப்பேற்று 2023 – 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம். அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, அவர்கள் 12 கோடி பேருக்குத்தான் வேலை கொடுப்போம் எனக் கூறுகின்றனர். இதனால் உடன் பிறந்தவர்கள் பலர் பாதிப்பு அடைகின்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

வறுமை கோட்டிற்குக் கீழே கீழே இருப்பவர்களுக்குத்தான் கொடுப்போம் எனக் கூறுகின்றனர். வளர்ந்த மாநிலங்களுக்கு இனி கொடுக்க மாட்டார்களாம். மத்திய அரசு அம்பேத்கர் கொடுத்த மாநில சட்ட உரிமைகளைப் பறிக்க நினைக்கிறது.

பெயர் சொல்ல முடியாத அடக்குமுறை அரசு, மாற்றான் தாய் மனசு உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அரசு தமிழ்நாட்டிற்கு கேடுதான் விளைவிக்கும்.

மத்திய அரசு நாளை உங்களிடம் வந்து பொய் மூட்டைகளைச் சொல்லும். அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க எந்த தகுதியும் இல்லை. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமமாக வாழ வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், சாதி, மதம் இருக்கக் கூடாது, ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் மந்திரிக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

ஐ.பெரியசாமி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

பேரூராட்சிகளிலும் வீடு கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளேன். அதையும் செய்வோம் எனக் கூறியுள்ளார். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளேன்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com