ENG vs NZ: 3-0 என வரலாறு படைத்த இங்கிலாந்து; இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? | England creates history by defeating Newzealand in all the three test matches

Share

அதே போல், முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இன்னுமொரு ஐந்து விக்கெட் ஹாலினை லீச் பதிவு செய்தார். ஜிம் லேக்கருக்கு அடுத்தபடியாக ஹெட்டிங்லேயில் ஐந்து விக்கெட் ஹாலினை நிறைவு செய்த இங்கிலாந்து ஸ்பின்னரும் அவர்தான். 1974-க்குப் பின், ஒரே டெஸ்டில் இரண்டு ஐந்து விக்கெட் ஹாலினைப் பதிவேற்றிய இங்கிலாந்து ஸ்பின்னரும் அவர்தான். அவரது பத்து விக்கெட்டுகள்தான் இங்கிலாந்துக்கான இலக்கை இன்னமும் எளிதாக்கியது.

உண்மையில், அந்த வார்த்தைகள்கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மைதான். இதைவிட அதிகமான இலக்காக இருந்தாலும் அடிக்கும் மனநிலையில் உள்ள இங்கிலாந்துக்கு, 296 என்பதெல்லாம் சவால் விடத்தக்கதல்ல. ரூட்டின் ரிவர்ஸ் ஸ்வீப்பால் பறந்த வேக்னரின் பந்தும், பேர்ஸ்டோவின் அதிவேக அரை சதமும், ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியும் அதையே பறைசாற்றின.

பேர்ஸ்டோ | ENG vs NZ

பேர்ஸ்டோ | ENG vs NZ

அவர்களது புதிய அத்தியாயம் பிரமிக்க வைக்கிறதுதான் என்றாலும், இதில் இன்னொரு பார்வையும் விரிகிறது. “ஆபத்தை நோக்கியே பயணிப்போம்” என்பதுதான் ஸ்டோக்ஸின் அணுகுமுறை என்றும், அது தனது வேலையைச் சுலபமாக்குகிறது என்றும் மெக்கல்லம் கூறியிருந்தார். இந்தத் தொடருக்கு இந்தப் பாணி சரி, ஆனால் எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் இதுவே சாத்தியமா?

அதே போல் புல்தரை பிட்சுகளையும், ஸ்விங்கையும் மகிழ்ந்துலாவச் செய்து இங்கிலாந்து வெல்வதையே இதுவரை பார்த்த கண்களுக்கு ஃப்ளாட் டிராக்கின் பக்கம் அவர்கள் திரும்பி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் இதுதான் தொடரப் போகிறதா, அல்லது பழையபடி க்ரீன் டாப் பிட்சுகள்தான் அவர்களது அபிமானத்துக்குரியவை என்றால் இந்த அட்டாக்கிங் ஆட்டம் அவர்களுக்கு அங்கேயும் கை கொடுக்குமா?! இந்தக் கேள்விகளுக்கான விடை, இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் கிடைக்கலாம்.

நியூசிலாந்துக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற சமயத்தில், ஒருமுறை, கேரி ஸ்டெட், “வெல்லவோ, போராடித் தோற்கவோதான் கற்றுக் கொள்ள வேண்டும், டிரா தேவையில்லை” என்றார். இதே வார்த்தைகளை ஒட்டிய கருத்தைத்தான் கோலி தன்னிடம் கூறியதாக ஹர்பஜன் ஒருமுறை கூறியிருந்தார்.

ENG vs NZ | இங்கிலாந்து டீம்

ENG vs NZ | இங்கிலாந்து டீம்

தீயின் நாக்குக்கு தீதானே சரிசமமாகச் சவால் விட முடியும்?!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com