திட்வா புயல் தமிழ்நாட்டை நெருங்குகிறது – எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

Share

திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக நகரும் இந்த புயல் இன்று (நவம்பர் 30) மாலை 25 கி.மீ அளவுக்கு நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நவம்பர் 30 அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, நாகை வேதாரண்யத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவிலும் திட்வா புயல் நிலைகொண்டுள்ளது” என்று வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ”இது வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று அதிகாலை தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைக்கு 50 கி.மீ தொலைவிலும், மாலை 25 கி.மீ தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

திட்வா புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com