செங்கோட்டையனின் கணக்கு தவறாகி போனதா? விஜயுடன் பேசியது ஏன்?

Share

செங்கோட்டையன், அதிமுக

பட மூலாதாரம், FB/Sengottaiyan

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தற்போது அந்தக் கட்சியிலிருந்து மொத்தமாக விலகி புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 5 அன்று, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன் அதனை செய்வதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு பத்து நாட்கள் கெடுவிதித்து ஊடகங்களில் பேசினார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் ஊடகங்களை சந்தித்த போது “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னை அழைத்து பேசியது பாஜகதான் ” என்று கூறியிருந்தார்.

கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல் எழுப்பி இரண்டு மாதங்களுக்கும் மேலான பின்னரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் வைத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கடந்த காலங்களில் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்களை நீக்கியது போலவே செங்கோட்டையனும் நீக்கப்பட்டார். கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய அனைத்து பொறுப்புகளும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக புதன்கிழமை (நவம்பர் 26) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் செங்கோட்டையன்.

பாஜகவை நம்பி அவர் போட்ட கணக்குகள் தவறாகிப் போய்விட்டதாக ஒருபுறம் பேசப்படும் நிலையில், ‘இது அந்தக் கட்சியின் விவகாரம், எங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று பாஜக தலைவர்கள் உறுதியாக மறுத்து வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com