முகத்தில் உள்ள அம்மைத் தழும்புகளை நீக்க முடியுமா? | Is it possible to remove scars on the face?

Share

இத்தகைய ஆழமான, பழைய வடுக்களையும் தழும்புகளையும் வெறும் க்ரீமை மேல்பூச்சாகப் பயன்படுத்தி ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றுவது சாத்தியமில்லை. அது பலவித சிகிச்சைகளை உள்ளடக்கி அணுகப்பட வேண்டியது.

அதாவது, மேல்பூச்சுக்கு க்ரீமும் உபயோகிக்க வேண்டியிருக்கும். லேசர் அல்லது மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தழும்பின் ஆழத்தின் தன்மையைப் பார்த்துதான் அதை முடிவுசெய்ய முடியும்.

சருமப் பாதுகாப்பு - சித்தரிப்பு படம்

சருமப் பாதுகாப்பு – சித்தரிப்பு படம்

ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பிரச்னை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும். உங்கள் விஷயத்தில் அம்மையால் ஏற்பட்ட தழும்பு என்பதால், தழும்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் சிகிச்சை செய்யலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com