2005 உலகக் கோப்பையில் 2-ம் இடம் பிடித்த பிறகு இந்திய வீராங்கனைகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது; மிதாலியின் வைரல் பேட்டி | How much money was given to Indian players in 2005 World Cup; Mithali viral interview

Share

இந்த ஆண்டு தொடக்கத்தில் லாலன்டாப் (Lallantop) என்ற தனியார் ஊடகத்துக்கு அளித்திருந்த அந்தப் பேட்டியில் மிதாலி ராஜ், “அப்போது வருடாந்திர ஒப்பந்தங்கள் எதுவும் கிடையாது. போட்டிக் கட்டணம் கிடையாது.

2005 மகளிர் உலகக் கோப்பையில் நாங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது ​​ஒரு போட்டிக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.

அதுவும் அந்தத் தொடருக்காக மட்டுமே. அதைத் தவிர போட்டிக் கட்டணம் எதுவும் நாங்கள் பெறவில்லை.

விளையாட்டில் பணம் இல்லை, எனவே போட்டிக் கட்டணத்தை மட்டும் எங்கிருந்து பெறுவது?

Mithali Raj - மிதாலி ராஜ்

Mithali Raj – மிதாலி ராஜ்

இந்தப் போட்டிக் கட்டணங்கள் மற்றும் வருடாந்திர ஒப்பந்தங்கள் எல்லாம் பி.சி.சி.ஐ-யின் கீழ் வந்தபோது கிடைக்கத் தொடங்கின (1973 முதல் 2006 வரை இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் WCAI எனும் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் 2006-ல் BCCI-யுடன் இணைக்கப்பட்டது).

முதலில் ஒவ்வொரு தொடர், அதன் பிறகு ஒவ்வொரு போட்டி எனக் கட்டணம் வழங்கப்பட்டது. சமீபத்தில்தான், ஆண்கள் அணிக்குச் சமமான ஊதியம் வழங்கப்பட்டது” என்று கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com