இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், “கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு ஜூரி தலைவராக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மலையாள சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களின் கருத்துகள் அவர்களுக்குத் தேவைப்பட்டதால் என்னை அழைத்தார்கள். ‘நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எந்தத் தலையீடும், இடையூறும் இருக்காது, முழு சுதந்திரத்துடன் முடிவுகளையும், உங்கள் கருத்துகளை வைக்கலாம்’ என்று சொன்னார்கள்.

ஆனால், தேசிய விருதுகளில் அது நடப்பதில்லை. தேசிய விருதுகளில் நிறைய சமரசங்கள் செய்கிறார்கள், தவறுகள் இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
திறமைக்கு மதிப்பளித்து சமரசமின்றி விருதுகள் அறிவிக்கும் ஜூரி குழுவும், அரசும் இல்லையென்றால் அவர்கள் அறிவிக்கும் விருதிற்கும் மதிப்பிருக்காது.
மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களைப் போன்றவர்களுக்குத் தகுதியில்லை” என்று காட்டமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.