ஆந்திரா ஸ்ரீககுளம்: வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசல் – 9 பேர் உயிரிழப்பு

Share

வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், UGC

ஆந்திராவின் ஸ்ரீககுளம் மாவட்டத்தின் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்ததாக, பிபிசியிடம் காவல்துறை கூறியுள்ளது.

ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் அக்கோவிலில் திரண்டதால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், மாநில வேளாண் துறை அமைச்சர் கே. அச்சநாயுடுவும் அவ்விடத்திற்கு சென்றார்.

இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

சம்பவ இடத்தில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com