‘ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம் | Hand over the Asia Cup BCCI letter to Asian Cricket Council

Share

மும்பை: ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்.

கடந்த மாதம் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.

இது சர்ச்சையான சூழலில் தற்போது ஆசிய கோப்பையை இந்திய அணியின் வசம் வழங்க வேண்டுமென ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது. இதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இணங்க மறுத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) முறையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் நவம்பர் 4 முதல் 7-ம் தேதி வரையில் ஐசிசி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com