Chennai weather: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை

Share

ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 21) செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, “வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும். அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com