தமிழ்நாடு அரசின் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏன்?

Share

இந்தியா, பாஜக, திமுக, கல்வி, தமிழக அரசு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க, தமிழ்நாட்டிற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்ட பயனாளிகளாக அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து கட்டணம் செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுநலமனு தாக்கல் செய்த மனுதாரர் ஈஸ்வரன் இதை கடுமையாக எதிர்த்துள்ளார். தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்திச் சேர முடியாத நிலையிலிருக்கும் ஏழை மாணவர்களைச் சேர்க்கும் வகையில், அறிவிப்பை மாற்ற வேண்டுமென்று அவர் கோரியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கமும், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தடையுத்தரவு பெற முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com