இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனுத்தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் சஹல், தனஶ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சாஹலும் இதற்கு ஒத்துக்கொண்டார்.