இங்கிலாந்து அணியில் விளையாடுவது என் சிறுவயது கனவு; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் வோக்ஸ் | Playing for England was my childhood dream; Chris Woakes retires from international cricket

Share

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வோக்ஸ், இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 33 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், 62 டெஸ்ட் போட்டிகளில் (2013-ல் அறிமுகம்) 192 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

இக்கட்டான சூழல்களில் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்திருக்கும் வோக்ஸ், மூன்று ஃபார்மெட்டுகளிலும் மொத்தமாக 3,500-க்கும் ரன்கள் குவித்திருக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு முன்கள பவுலராக இங்கிலாந்து பவுலிங் யூனிட்டை வழிநடத்திய வோக்ஸ், 2019 ஒருநாள் உலகக் கோப்பையிலும், 2022 டி20 உலகக் கோப்பையிலும் தனது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

கிறிஸ் வோக்ஸ்

கிறிஸ் வோக்ஸ்

கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்து வந்து விளையாடிய ஆஷஸ் தொடரில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியாவுக்கெதிரான ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சீனியர் பவுலராக ஆடிய வோக்ஸ், கடைசி போட்டியில் கையில் அடிபட்டபோதும் ஒற்றைக் கையுடன் களமிறங்கி பேட்டிங் செய்திருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com