‘நூலிழையில் உயிர் தப்பினேன்’ – கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

Share

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, துர்கா தேவி

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

“காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்.” என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.

“யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்,” என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்)

கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com