தமிழர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் பல நூற்றாண்டுத் தொடர்பு உள்ளது; ரேவந்த் ரெட்டி பேச்சு | Tamils ​​and Telugus have centuries-old ties; Revanth Reddy speaks

Share

தெலங்கானாவில் இன்ஜினியர்களின் திறமைகளை மேம்படுத்த `யங் இந்திய ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டி’ தொடங்கியிருக்கிறோம்.

கடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம்கூட நாம் வெல்லவில்லை. நம்முடைய மக்கள்தொகை 140 கோடி.

ஆனால், நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட தென் கொரியா 32 தங்கப் பதக்கங்களை வென்றது. தென் கொரியாவில் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டிக்கு சென்றிருந்தேன்.

அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒலிம்பிக்கில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்கள். ஒரு பெண் 3 தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆனால், நம்மிடம் ஒன்றுகூட இல்லை. அதனால், `யங் இந்தியா ஸ்போர்ட்ஸ் யுனிவெர்சிட்டி’ ஆரம்பித்தோம்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

எங்களுடைய பல்கலைக்கழகத்தில் பயிற்சியளிக்க சில மாணவர்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருக்கிறது. நாங்கள் அட்மிஷன் தருவோம்.

2028 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல தமிழ்நாடும், தெலங்கானாவும் பொறுப்பேற்றிருக்கிறது.

மோடி, அமித் ஷா அதை செய்யமாட்டார்கள். அதை நாங்கள் செய்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வோம்.

தமிழ்நாடு, தெலங்கானா மாடலைக் கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சமத்துவம், சமூக நீதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு கல்விதான் சிறந்த ஒரே வழி என்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com