ஆயிரம் தாமரை மொட்டுகளே: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மயங்க வைக்கும் 15 பாடல்கள்

Share

 எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பட மூலாதாரம், G VENKET RAM

சுமார் அரை நூற்றாண்டாக தமிழ் திரையிசை ரசிகர்களை தன் குரலால் மயக்கிய எஸ்.பி. பாலசுப்ரமணயத்தின் நினைவு நாள் செப்டெம்பர் 25. இந்தத் தருணத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத 15 பாடல்களின் தொகுப்பு இது. 1969லிருந்து தன்னுடைய மரணம் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை எஸ்.பி.பி. பாடியிருக்கும் நிலையில், 90களின் துவக்கம்வரை அவர் பாடிய பாடல்களில் இருந்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

1. ஆயிரம் நிலவே வா (1969):

எஸ்.பி. பாலசுப்ரமணியன் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அடிமைப் பெண் படத்தின் மூலம்தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்பே சாந்தி நிலையம் படத்திற்காக எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் ‘இயற்கை எனும் இளைய கன்னி’ பாடலை அவர் பாடியிருந்தாலும் அந்தப் படம் வெளியாகும் முன்பே, அடிமைப் பெண் வெளியானதால், இந்தப் பாடலே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முதல் தமிழ் பாடலாக அமைந்துவிட்டது.

இதே படத்தில்தான் ஜெ. ஜெயலலிதாவும் ‘அம்மா என்றால் அன்பு’ பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். ஆயிரம் நிலவே வா பாடலை புலமைப்பித்தன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர். நடித்த படமொன்று, தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, அதில் ஒரு பாடலை எம்.ஜி.ஆருக்கு எஸ்.பி.பி. பாடியிருந்தார். அந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு குரல் பிடித்துப்போனது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com