`பாலம் இல்லாம தினம் 30 கி.மீ சுத்தி போறோம்”
நாங்களா பூம்புகாருக்குப் போகணும்னா இங்கேயிருந்து வசப்புத்தூர் போய்ப் போகணும். இல்லாவிட்டால் சீர்காழி போய்த்தான் போகணும்.
ஆனா இந்த பாலத்தைக் கட்டிவிட்டால் நாங்கலாம் இங்கேயிருந்தே பூம்புகாருக்கெல்லாம் போயிடுவோம். இந்த பாலத்தைக் கட்டாமல் நாங்க எங்குப் போனாலும் சுத்தி தான் போக வேண்டியதாக இருக்கு.
இதுல வேற போயிட்டு வரவே ஒருநாள் ஆகிவிடுது. பாலத்துக்கு கீழ கோயில் ஒன்று இருக்கு. அது இங்கே இருக்கிற நிறைய பேருக்கு குலதெய்வம்.
இந்த பாலத்தைக் கட்டாமல் அப்படியே போட்டதுல அந்தக் கோயிலுக்கு கூட போக முடியல. ஆத்திர அவசரத்துக்கு எங்கேயாச்சும் போகணும்னா கூட ஒடனே போகமுல்ல.
இங்கே இருக்கிற நிறைய பேர் மீன் விற்கத் திருநகரி போவோம். அதுக்கு இங்கேயிருந்து வசப்புத்தூர் போயிதான் போகனும். அப்படியே அங்கே போனாலும் திருநகரி போறதுக்கு சுத்தமாகப் பஸ்ஸே இருக்காது. சரி, ஆட்டோவுல போலான்னு பார்த்தா ஐநூறு ரூபாய் கேக்குறாரு ஆட்டோக்காரு.
நாங்க வாங்கிய மீன வித்தால்தான் நாலு காசையே கையில பாப்போம். அப்படி இருக்கிறப்ப இதுல எங்கேயிருந்து நாங்க ஐநூறு ரூபாய் குடுத்து ஆட்டோவில் போறது? பாலம் இல்லாம நாங்க தினம் 30கி.மீ சுத்தி போறோம்பா .
அப்படி சுத்தி போனால், வீடு திரும்பவே சாயங்காலம் ஆகிவிடுது. இந்த பாலத்தை சீக்கிரம் கட்டிக்கொடுங்கப்பா. கட்டிக்கொடுத்துவிட்டால் எங்களுக்கு போயிட்டு வர இவ்வளவு சிரமமாக இருக்காது சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துவிடுவோம்” என ஆற்றாமை பொங்க கவலையோடு பேசினர் அம்மக்கள்.