அந்த நேரத்தில் எனக்கு அப்படி தோன்றியது; AK 47 செலிப்ரேஷன் குறித்து பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் | Pakistan cricketer Sahibzada Farhan spoke about his ak 47 gun celebration in match against india

Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமாக ஆடி தோற்றதைப் போல் அல்லாமல், போட்டியை 19-வது ஓவர் வரை கொண்டு சென்று போராடித் தோற்றனர்.

மறுபக்கம், லீக் போட்டியைப் போல அவசரமாக ஆட்டத்தை முடிக்காமல் நிதானமாக ஆடி வெற்றிபெற்ற இந்திய வீரர்கள், முந்தைய போட்டியில் செய்ததைப் போலவே பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றனர். இத்தகைய செயல் மீண்டும் பேசுபொருளானது.

India vs Pakistan - asia cup

India vs Pakistan – asia cup
https://x.com/BCCI

இவ்வாறிருக்க, நேற்றைய போட்டியில் அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஏகே 47 துப்பாக்கி ஸ்டைலில் பேட்டை காண்பித்து செலிப்ரேஷன் செய்த விதம், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் துப்பாக்கிச்சூட்டுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்குத் பலருக்கும் தீனியாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் சாஹிப்சாதா ஃபர்ஹான், தான் அப்படி செய்ததற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com