ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடி இன பெண்: பாஜவுக்கு ஜி.கே.வாசன் நன்றி

Share

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்ணை வேட்பாளராக அறிவித்த பாஜக கூட்டணிக்கு நன்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர்  திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக பா.ஜ.க மற்றும் என்டிஏ  கூட்டணிக்கு வாழ்த்துகள். இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு பழங்குடியினத்தில் இருந்து முதன் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. நன்கு படித்தவர், அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும், பொது வாழ்விலும் நிறைய அனுபவம் பெற்றவர். பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும்  திரவுபதி முர்மு வெற்றிபெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com