Vishal: “எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" – விஷால்!

Share

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், “எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் இன்று மதியம் நல்லசெய்தியை அறிவிக்கிறேன்.” என்றார். 

இந்நிலையில் இன்று நடிகை சாய் தன்ஷிகாவுக்கும், விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இருவீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்திருக்கிறது.

இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஷால், “என் பிறந்த நாளுக்கு உலகின் மூலைமுடுக்குகளிலிருந்து எனக்கு வாழ்த்து மழையைக் கொட்டிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

எனது இந்தப் பிறந்த நாளில் இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்திருக்கிறது. எனக்கும், சாய் தன்ஷிகாவிற்கும் இன்று இருவரின் பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த புதிய பயணத்தில் எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்லாசிகளையும் பெற விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com