Dhoni; India; Aakash Chopra; இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஸ்போர்ட்ஸ் ஊடக வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தோனி அப்படி பயிற்சியாளராக வரமாட்டார்

Share

தனது யூடியூப் சேனலில் இதுபற்றி பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “தோனி ஒருபோதும் ஹெட் கோச்சாக மாட்டார். அதற்கான வாய்ப்புகள் குறைவு.

தலைமைப் பயிற்சியாளர் வேலை மிகவும் கடினமானது. அதில் ஒரு வீரராக இருந்ததைக் காட்டிலும் பிஸியாக இருக்கக்கூடும்.

வருடத்திற்கு 10 மாதங்கள் சுற்றுப்பயணம், பயிற்சி, அழுத்தம் என இதையெல்லாம் மீண்டும் அனுபவிக்க அவர் விரும்ப மாட்டார்.

தனது வாழ்க்கையில் பல வருடங்களை ஏற்கெனவே கிரிக்கெட்டில் கழித்துவிட்டார்.

இப்போது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைக்கிறார். அதனால் முழுநேர கோச்சிங் அவர் செய்ய மாட்டார்.

ஆகாஷ் சோப்ரா

ஆகாஷ் சோப்ரா

ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் இரண்டு மாதங்கள் கோச்சிங் கொடுப்பது ஓகே.

நிறைய வீரர்கள் தங்களின் கோச்சிங் கரியரை சில மாதங்கள் ஐ.பி.எல்லில் செய்வது வழக்கம்தான்.

ஆனால், இந்தியா அணியின் ஹெட் கோச் என்றால் வருடம் முழுக்க வேலை செய்ய வேண்டும்.

எனவே, தோனி அந்த அளவுக்கு இப்போது கிரிக்கெட்டுக்கு நேரம் ஒதுக்க மாட்டார்” என்று கூறினார்.

பின்னாளில் இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளர் ஆவாரா என்பது குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com