அந்தப் பேட்டியில் அவர், “என் சகோதரருக்கும் சச்சினுக்கும் ஒரே மாதிரியான திறமைதான் இருந்தது. என் சகோதரர் சச்சினை விட பெரியவர் என்றோ, சச்சின் என் சகோதரரை விட பெரியவர் என்றோ சொல்ல முடியாது.
இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். வினோத் எப்போதும் தான் சச்சினை விட சிறந்தவன் என்று சொன்னதை நான் கேட்டதில்லை.
சச்சின் எப்போதும் வினோத்தை ஆதரித்து வந்தார். அவர்களின் நட்பு இன்னும் மிகவும் வலுவாக இருக்கிறது.
சச்சின், ஆண்ட்ரியாவை (வினோத் காம்ப்ளியின் மனைவி) அழைத்து வினோத்தின் நலம் விசாரிப்பார். சச்சின் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் ரஞ்சி ட்ரோபி போட்டிகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களை ஒன்றாகப் பார்த்தேன்.
நான் டிரஸ்ஸிங் ரூமுக்கு சாப்பிடச் செல்வேன், அங்கு சச்சின், வினோத், நான் மூவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம். நாங்கள் கிண்டல் செய்து, நல்ல நேரத்தைச் செலவிடுவோம்.” என்று கூறியிருக்கிறார்.