RCB; Ambati Rayudu; ஐ.பி.எல் 18-வது சீசனில் முதல் கோப்பை வென்ற ஆர்.சி.பி இதே வேகத்தில் சென்றால் 5 கோப்பைகளை வெல்ல 72 ஆண்டுகள் ஆகும் என அம்பத்தி ராயுடு கிண்டல்

Share

ஐபிஎல்-லில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் அணி ஆர்.சி.பி. ஆனாலும், ஐ.பி.எல் முதல் சீசனிலிருந்து தொடர்ச்சியாக 17 சீசன்களாக மூன்று முறை இறுதிப் போட்டி வரை சென்றும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இப்படியிருக்க, கடந்த சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையில், `நிச்சயம் கோப்பையை வெல்வோம்” என்ற பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கியது பெங்களூரு அணி.

அதற்கேற்றாற்போல, அவர்களைப் போலவே 17 சீசன்களாக முதல் கோப்பைக்காகப் போராடிக்கொண்டிருந்த பஞ்சாப் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி, ஐ.பி.எல் கோப்பையை முதல்முறையாகக் கையிலேந்தியது.

இந்த நிலையில், மும்பை, சென்னை ஆகிய அணிகளின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, பெங்களூரு அணி இன்னும் நான்கு கோப்பைகளை வெல்ல 72 வருடம் ஆகும் என்று கிண்டலடித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com