பெடரல் வங்கி வட்டியைக் குறைக்குமா?
நுகர்வோர் விலை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இதை வைத்து தான் செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பது அமையும்.
ஒருவேளை, இந்தப் பட்டியல் 0.3 சதவிகிதம் கூடியிருந்தால், வட்டி விகித குறைப்பு இருக்காது. ஆனால், அதற்கும் கீழ் இருந்தால், 99 சதவிகிதம் வட்டி விகித குறைப்பு இருக்கும்.
சீனா வரியைப் பொறுத்தவரை, ட்ரம்ப் வரியை 90 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
ட்ரம்ப் – புதின் சந்திப்பு எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2008… 2020… 2025!
பங்குச்சந்தை தொடர்ந்து ஆறு வாரங்களாக இறங்குமுகத்தில் உள்ளது. கடந்த இருபது வருடங்களில், இந்த மாதிரியான சார்ட் பேட்டர்ன் வருவது மூன்றாவது முறை மட்டுமே ஆகும்.
முதன்முதலாக 2008-ம் ஆண்டு இப்படி இருந்தது. அடுத்தது, கொரோனா பேரிடர் 2020-ம் ஆண்டின் போது.
2008-ம் ஆண்டு சந்தை வீழ்ச்சியைக் கண்டது. ஆனால், இதற்கு நேரெதிராக, 2020-ம் ஆண்டு, இந்த சார்ட் பேட்டர்னுக்கு பிறகு, சந்தை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உச்சத்தைக் கூட தொட்டது.
அதனால், இப்போது எப்படி சந்தை மாறும் என்பது தெரியவில்லை.