Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்…' – நடிகர் சிரஞ்சீவி

Share

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.

தனுஷ்
தனுஷ்

அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ ‘குபேரா’ படத்தின் வெற்றியை எனது வெற்றிபோல் உணர்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் அனைவரும் எனக்கு பரிச்சயமானவர்கள். பாசத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். இங்கு நான் விருந்தினராக வரவில்லை.

உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவா கதாபாத்திரத்தை தனுஷைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது.

படத்தைப் பார்த்தபோது ஆரம்பத்தில் தனுஷை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தில் அவர் அவ்வளவு ஆழமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் தேவா.

 சிரஞ்சீவி
சிரஞ்சீவி

முன்கூட்டியே வாழ்த்துகள் சொல்கிறேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது உங்களுக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கவில்லையென்றால் தேசிய விருதிற்கே அர்த்தம் இல்லை. நிச்சயம் நீங்கள் விருது பெறுவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.     

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com