‘ஃபைனலுக்கு மும்பை வந்தால் ஆர்சிபி கோப்பை கனவு அவ்வளவுதான்!’ – அஸ்வின் வார்னிங் | If Mumbai reaches final RCB s trophy dream will over Ashwin warns ipl 2025

Share

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் கூறியுள்ளார்.

குவாலிபையர்-1 ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி. எலிமினேட்டரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் விளையாட வேண்டும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

“ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டுமென்றால் மும்பையை குஜராத் அணி எலிமினேட்டரில் வீழ்த்த வேண்டும். மும்பை அணியை இறுதிக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. எதையாவது செய்து அவர்களை தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஏனெனில், இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தும் வாய்ப்புள்ள ஒரே அணி மும்பை தான். நான் ஆர்சிபி அணியில் இருந்தால், இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள வேண்டுமென்று தான் விரும்புவேன்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com