பஹல்காம் தாக்குதல்: திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன, 26 வயது கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழப்பு

Share

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தாக்குதல், இந்தியா

பட மூலாதாரம், Arranged

படக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட வினய் நர்வால், இந்திய கடற்படையில் ஒரு லெப்டினன்ட்டாக பணிபுரிந்தவர்.

வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.

“திருமணம் முடிந்து அவன் சுவிட்சர்லாந்து போக ஆசைப்பட்டார். ஆனால் விசா கிடைக்காததால் காஷ்மீருக்குச் சென்றார்” என வினயின் தாத்தா ஹவா சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த நர்வால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் சேர்ந்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com