“மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனின் பசி போய்விட்டது என உணர்கிறேன். அவர்கள் இங்கே விடுமுறையைக் கழிக்க வந்துள்ளனர். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கைப் பார்க்கிறார்கள், கிளம்புகிறார்கள். தங்கள் அணியின் வெற்றிக்காக போராட வேண்டும் என்ற ஆசை வெளிப்படவில்லை” என்று சேவாக் பேசியுள்ளார்.
“நான் நிறைய முன்னாள் வீரர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன், ஆனால் ஒன்றிரண்டு பேர் மட்டுமே எனக்கு “ஆம், நான் உண்மையிலேயே அணிக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்’ என்ற உணர்வைத் தந்தார்கள்” என்றும் கூறியுள்ளார்.
மேக்ஸ்வெல் இந்த சீசன் முழுவதும் 41 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார், 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். லிவிங்ஸ்டோன் 87 ரன்கள் அடித்திருக்கிறார்.