Sunita Williams Return: 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..| Sunita Williams, Butch Wilmore Return Safely on earth

Share

சுனிதா வில்லியம்ஸ் பயண நேரக் குறிப்புகள்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது தொடர்பாக கால அட்டவனையை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதன் நேரக் குறிப்புகள் இங்கே…

*மார்ச் 18, காலை 8:15 மணி: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் டிராகன் விண்கலத்திற்குள் சென்று, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

*காலை 10:35 மணி: டிராகன் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டுப் பிரிந்தது (Undocking) பயணத்தைத் தொடங்கியது.

*மார்ச் 19, அதிகாலை 2:41 மணி: டிராகன் கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து வெளியில் வந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

*அதிகாலை 3:27 மணி: கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பெருங்கடல் கடற்பரப்பில் டால்பின்கள் வரவேற்க பூமியில் இறங்கியது.

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் 9 மாதங்கள் பணியாற்றிவிட்டு, பூமிக்குத் திரும்பியிருக்கும் இவர்கள் உடலில் சில மாற்றங்களும், பூமியின் சூழ்நிலை, கால மாற்றங்களை பழகுவதற்கு தாமதமாகும் என்பதால் 45 நாள்கள் மருத்துவ கவனிப்பில் இருப்பார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com