அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதால்தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி திருமண வரவேற்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று கொடிசியா வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர், வினோஜ் செல்வம் கலந்து கொண்டனர்.
சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் – எடப்பாடி
அண்மை காலமாக எடப்பாடிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் மனகசப்பு நிலவி வருவதை காண முடிகிறது. இதனால் இருவரும் பரஸ்பரம் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வரும் நிலையில், இன்று இருவரும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.