சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார்: பிசிசிஐ அறிவிப்பு | Jasprit Bumrah Ruled Out Of India Champions Trophy 2025 Squad

Share

அகமதாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் அவர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்திருந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அதன் பின்னர் அவர், எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்கேன் பரிசோதனை முடிவு தொடர்பாக பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவினர் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது

இந்த சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நாளை (12-ம் தேதி) நடைபெற உள்ள கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்திய அணி விவரம்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com