இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் 2 ஆட்டங்களில் மோதல் | India to host Maldives for two women international friendlies

Share

இந்தியா – மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் நட்புரீதியிலான 2 சர்வதேச ஆட்டங்களில் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் 30-ம் தேதி மற்றும் ஜனவரி 2-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பிஃபா கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 69-வது இடத்திலும், மாலத்தீவுகள் 163-வது இடத்திலும் உள்ளன. இந்திய கால்பந்து அணி கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து மகளிர் சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தது. இந்த தொடரில் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோல்வி கண்டிருந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com