இந்நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் பேட்டிங் பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் அணியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காயம் குணமடைந்த பின் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் தங்களது உடல் தகுதியை நிருபிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
KL Rahul has been ruled out of the T20I series against South Africa owing to a right groin injury while Kuldeep Yadav will miss out in the T20I series after getting hit on his right hand while batting in the nets last evening.
More details here – https://t.co/KDJwRE9tCz #INDvSA— BCCI (@BCCI) June 8, 2022
கே.எல்.ராகுல் இந்த தொடரிலிருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
Also Read : 13 டி20 போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனையை நோக்கி இந்தியா தீவிரம்
இந்திய அணி : ரிஷப் பந்த் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.