முதலாம் கேரள ஸ்கூல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று கொச்சி மகாராஜா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாகத் துவங்கப்பட்டது. நவம்பர் 4 முதல் 11 வரை கொச்சியின் 17 இடங்களில் மாணவர்களுக்காக 37 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளின் அதே மாதிரியில் மாணவர்களுக்காக இப்படி ஸ்கூல் ஒலிம்பிக்ஸ் நடத்துவது உலகிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1562 குழந்தைகள் உள்பட மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக வெளிநாடுகளில் கேரள வழிக் கல்வி பயிலும் 50 மாணவர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.