சோஃபி பூன்ஸ்: உலகின் முதல் ஆய்வக மாணிக்க கல்லை இவர் உருவாக்கியது எப்படி?

Share

உலகின் முதல் ஆய்வக மாணிக்க கல்

பட மூலாதாரம், University of the West of England

படக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது.

செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில் நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில் வேகமாக செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு பிளாட்டின மோதிரத்தின் மீது சிறிய மாணிக்க துகளை வைத்து வளர்த்தெடுக்கும் வேதியியல் செயல்முறையை ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்டுபிடித்துள்ளார். உலகில் இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

இந்த செயல்முறை வெற்றிகரமாக செய்த ஆய்வாளரின் பெயர் சோஃபி பூன்ஸ். அவர் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டலின் வெஸ்ட் ஆஃப் இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் (UWE) நகை வடிவமைப்பில் மூத்த பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.

உலகின் முதல் ஆய்வக மாணிக்க கல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சோஃபி பூன்ஸ் ஆய்வகத்தில் ஒரு வேதியியல் செயல்முறையை உருவாக்கியுள்ளார். இது மாணிக்க கல்லின் வளர்ச்சி செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com