நபிகள் குறித்த சர்ச்சை கருத்து எதிரொலி; குவைத் அங்காடியில் அகற்றப்படும் இந்தியத் தயாரிப்புகள்! | In Kuwait, super market has boycott indian products after Nupur Sharma’s statement controversy

Share

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். இது தொடர்பாக அரபு நாடுகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்தியத் தயாரிப்புகள் விற்பனை அலமாரியிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குவைத் நகருக்கு அருகிலிருக்கும் பகுதி ஒன்றில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்டில், இந்தியத் தயாரிப்புகளான அரிசி, மிளகாய் மற்றும் மசாலாப் பொருள்கள் உள்ள அலமாரியானது முற்றிலும் பிளாஸ்டிக் கவரால் மூடிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பிளாஸ்டிக் கவரின்மீது, அரபு மொழியில் “இந்தியத் தயாரிப்புகளை நாங்கள் அகற்றிவிட்டோம்” என்ற சிறிய குறிப்பும் ஒட்டப்பட்டுள்ளது.

நுபுர் சர்மா

நுபுர் சர்மா

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com