திருமணப் பதிவை பாதிக்கும் மெஹந்தி… பயோமெட்ரிக் பதிவுக் குழப்பத்தால் மணமக்கள் அவதி!

Share

மெஹந்தி திருமண நிகழ்வின் ஓர் அங்கம். மை பூசிய கண்ணும், மருதாணி பூசிய கையும் மணப்பெண்ணை ஸ்பெஷலாக காட்டும். ஆனால், பயோமெட்ரிக் முறையிலான கைரேகை பதிவு, திருமணங்களின் போது மருதாணி போடுவதைத் தடுக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 

மேற்கு வங்க ரெஜிஸ்டர் அலுவலகங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு ஜோடிகளின் விரல்கள் ஆதாரத்திற்காக ஸ்கேன் (பயோமெட்ரிக் ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யப்படுகிறது.

திருமண ஜோடி அப்ளிகேஷன் கொடுக்கும்போதும், அப்ளிகேஷன் கொடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் நடைபெறும் திருமணத்திலும் என இரண்டு முறை இந்த பயோமெட்ரிக் பதிவு நடக்கிறது.

பயோமெட்ரிக் ரெஜிஸ்ட்ரேஷன் (சித்தரிப்பு படம்)

நவீன் குமார் மற்றும் அஞ்சு சவுத்ரி என்ற ஜோடி டிசம்பர் 7 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்களின் திருமண பதிவு ஜனவரி இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. 

இது குறித்து குமார் கூறுகையில், “என் மனைவியின் கைகளிலும் விரல் நுனிகளிலும் திருமணத்திற்குப் போடப்பட்ட மெஹந்தி இருந்ததால், பயோமெட்ரிக் முறையிலான கைரேகை பதிவு பாதிக்கப்படலாம். அதனால் மெஹந்தியின் நிறம் மறைந்த பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்று பதிவாளர் எங்களிடம் கூறினார்’’ என்று தெரிவித்துள்ளார். 

“மெஹந்தியால் கைவிரல் சரியாகப் பதிவதில்லை… இதனால் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்ய முடிவதில்லை’ என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதனால் திருமணம் செய்து கொள்ள வரும் தம்பதிகள் கட்டைவிரலில் மெஹந்தியை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

“பயோமெட்ரிக் பதிவு தொடங்கப்பட்ட பிறகு, விரல் நுனியில், குறிப்பாக இடதுகை கட்டை விரலில் மெஹந்தி அல்லது அல்டா இருப்பது கைரேகை பதிவை பாதிக்கும் என்று எங்களுக்கு ஓர் அறிவிப்பு வந்தது. அதனால் கட்டை விரலில் மெஹந்தி பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு திருமண ஜோடிகளிடம் நான் குறிப்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மருதாணி!

சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், இதனால் கடைசி நேரத்தில் சாட்சிகளில் ஒருவரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்று பதிவாளர் ஒருவர் கூறியுள்ளார்.  

“மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் பயோமெட்ரிக் பதிவு தொடங்கப்பட்டதிலிருந்து, மணமக்களுக்கு இடதுகை கட்டைவிரல் நுனியை விட்டுவிட்டு மெஹந்தி வைக்கிறேன்’’ என மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்  சுசந்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com