எந்த எண்ணெய் என்றாலும் அளவுக்கு அதிகமான பயன்பாடு கூடாது. சர்க்கரைநோயாளிகள் தேங்காய் பயன்படுத்துவதையும் முடிந்தவரை குறைத்துக்கொள்வதுதான் சரியானது. தேங்காய் மட்டுமல்ல, தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இரண்டு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் இரண்டு வாரங்களுக்கொரு தேங்காய் பயன்படுத்தினால் போதுமானது.
தேங்காய் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கலாம். தேங்காய், தேங்காய்ப்பால் இரண்டிலும் எண்ணெய்ச்சத்து அதிகம். நார்ச்சத்து சிறிது உள்ளது என்றாலும், அதைவிட அதிகமாகக் கொழுப்புச்சத்து இருப்பதால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.