18 ஆண்டுகளாக தலைக்குள் தோட்டா; ஏமன் இளைஞருக்கு இந்திய மருத்துவர்கள் செய்த சவாலான அறுவை சிகிச்சை! |A bullet in the head for 18 years; Indian doctor took

Share

ஓரிரு வருடங்கள் அல்ல… சுமார் 18 வருடங்களாக தலையில் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள தோட்டாவுடன் வாழ்ந்து வந்த ஏமன் நாட்டவருக்கு நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெற்றிகரமாக தோட்டா அகற்றப்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அந்த 29 வயது நபர், “நான் ஏமன் நாட்டில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது, என் தந்தை வீட்டுக்கு அருகில் ஒரு பண்ணை வைத்திருந்தார்.

Surgery (Representational Image)

Surgery (Representational Image)

அங்கு வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பூண்டு, கேரட் போன்ற காய்கறிகளைப் பயிரிடுவார். நான் அடிக்கடி அங்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவதற்கும் உரமிடுவதற்கும் உதவிகளைச் செய்வது வழக்கம்.

ஒருநாள் வழக்கம்போல் பண்ணையில் இருந்து வீடு திரும்பியபோது, இரு குழுக்களிடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையின் நடுவில் நான் சிக்கிக்கொண்டேன். எனது தலைப்பகுதியில் துப்பாக்கி தோட்டா சென்றதால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு காயத்தை சுத்தம் செய்த மருத்துவர்கள், தோட்டாவை அகற்றவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com