‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்… பிறகு எதற்கு இத்தனை டெஸ்ட்டுகளை செய்ய வேண்டும்’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சர்க்கரைநோய் பாதிப்பால் தலை முதல் பாதம்வரை எந்த உறுப்பும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அடிக்கடி டெஸ்ட் செய்து அப்படி ஏதேனும் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால், ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்து குணப்படுத்த முடியும்.
பாதிப்பு தீவிரமாகிவிட்டால் அதை சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய முடியாது. பாதிப்பு வருவதற்கு முன்பே டெஸ்ட் செய்து பார்ப்பதும், பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுப்பதும்தான் புத்திசாலித்தனம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.