சூப் குடிப்பது ஆரோக்கியம் என நம்புபவரா நீங்கள்? இந்தத் தகவல்கள் உங்களுக்குத்தான்… |#ExpertOpinion | Are you a daily soup drinker? Don’t miss out on this! – Expert Opinion

Share

சரியான முறையில் சூப் தயாரிக்க, சில குறிப்புகள்!

* அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.

* அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

* சூப்பில் நறுமண இலைகள் சேர்க்கும்போது, அவற்றை அரைத்து உபயோகப்படுத்த வேண்டாம். அப்படியே இலைகளாக உபயோகப்படுத்தவும். முடிந்தால் அவற்றின் சாற்றை மட்டும் பயன்படுத்தவும். அரைத்துப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட அந்தப் பொருளின் மணமும் சுவையும் சூப்பில் அதிகரித்துவிடும். அது, சூப்பின் சுவையை மாற்றிவிடும்.

* காய்கறி சூப் தயாரிக்கும்போது, காய்கறி தேர்வில் கவனமாக இருக்கவும். எதிரெதிர் வண்ணங்களிலிருக்கும் காய்கறிகளை ஒரே சூப்பில் சேர்த்துவிடாதீர்கள். அது சுவை, மணம் என அனைத்தையும் கெடுத்துவிடும்!

* சூப்பை திடமாக்க, வொயிட் சாஸ் உபயோகிப்பதுண்டு. சிலர் வெண்ணெய் பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் வேண்டாமென நினைப்பவர்கள், கான்ஃப்ளார் உபயோகிக்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com