இது ஜிலேபி இல்ல சீனி மிட்டாய்.. விருதுநகரின் இந்த ஸ்பெஷல் மிட்டாய சாப்பிட்டிருக்கிங்களா?

Share

கருப்பட்டி மிட்டாய் போன்றே வெள்ளை சர்க்கரையில் தயார் செய்யப்படும் சீரணி மிட்டாயும் விருதுநகரில் புகழ் பெற்றது. வெள்ளை சீரணி மிட்டாய் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தென்மாவட்டங்களில் கிடைக்கும் சுவையான திண்பண்டம் எதுவென்றால், கண்ணை மூடி கருப்பட்டி மிட்டாயை கை காட்டலாம். இந்த கருப்பட்டி மிட்டாயை தென் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நம் மாவட்டத்தில் பலர் கருப்பட்டி மிட்டாயை சீனி மிட்டாய் அல்லதுசீரணி மிட்டாய் என்கின்றனர். ஆனால் உண்மையில் சீரனி மிட்டாய் வேறு கருப்பட்டி மிட்டாய் வேறு என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

விளம்பரம்

பார்க்க வெள்ளை தங்கம் போல இருக்கும் சீரணி மிட்டாய் சீனி பாகில் தயார் செய்யப்படுகிறது. கருப்பட்டி மிட்டாய் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகில் தயார் செய்யப்படுகிறது. நிறமும், சுவையும் தான் வேறுபடுமே தவிர மற்றபடி இரண்டு மிட்டாய்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும்.அதனால் மக்கள் கருப்பட்டி சீனி என குழப்பி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சுவை அடிப்படையில் கருப்பட்டி மிட்டாய் சீரணி மிட்டாய்கு சற்று முன்னிலையில் இருந்தாலும், வெள்ளை நிறத்தில் பளபளப்பாக இருக்கும் சீனி மிட்டாய்கும் ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர்.

News18

இரண்டு மிட்டாய்களுக்குமே தயாரிப்பு முறை ஒன்று தான், அரிசியும் உளுந்தும் கலந்த மாவினை எண்ணையில் பக்குவமாக சங்கிலி போல பிழிந்து பொரித்து சீனி பாகில் போட்டு எடுத்தால் அது தான் சீனி மிட்டாய். இதுவே கருப்பட்டி பாகில் போட்டு எடுத்தால் அது கருப்பட்டி மிட்டாய். சில இடங்களில் நாட்டு சர்க்கரை பாகில் கூட இதை தயார் செய்கின்றனர்.

நமது ஊரில் பாலவநத்தம், சாத்தூர், சிவகாசி போன்ற ஊர்களில் இந்த மிட்டாய் அதிகளவில் தயார் செய்யப்படுகிறது. அதே போல மற்ற மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளிலும் இந்த மிட்டாய் மிக பிரபலம். அதனால் தென் மாவட்டங்களுக்கு வருபவர்கள் தவறாமல் இந்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டு பாருங்க.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com