ஊட்டி: ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கிடந்த எலி – ஹோட்டலை மூட உத்தரவிட்ட அதிகாரி | ooty hotel controversy, officer took action

Share

இதனால் அதிருப்தியடைந்த ஜெகன், சாம்பாரில் எலி கிடப்பதை வீடியோ எடுத்ததுடன், தனக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்த வீடியோவையும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாராக அனுப்பிவைத்திருக்கிறார். எழுத்துபூர்வமாக புகாரையும் அளித்திருக்கிறார்.

இதனடிப்படையில் அம்மாஸ் கிச்சன் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, உடனடியாக அந்த ஹோட்டலை மூட உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், “வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் எலிக்குஞ்சு கிடப்பதாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்தேன். தற்காலிகமாக அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டிருக்கிறேன். சமையலறையை உடனடியாகச் சுத்தம் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com