வைட்டமின் சி: கை, கால் வலி போக்குவது முதல் காயங்களை ஆற்றுவது வரை… | Vitamin C: From relieving pain in hands and feet to healing wounds

Share

சரும அழகிலும் ஆரோக்கியத்திலும் வைட்டமின் சியின் பங்கு அவசியமானது. சரும செல்கள் தினமும் உதிர்ந்து, புதிதாக உருவாகும். அந்தச் செயலைச் சரியாகச் செய்யவும் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் வைட்டமின் சி சத்து அவசியமாகிறது.

 எலும்புகளின் இடையே `கார்ட்டிலேஜ்” எனப்படும் ஜவ்வுப்பகுதியானது குஷன்போல பாதுகாப்பாக இருக்கும்.  வயதாக ஆக இந்த ஜவ்வு தேய்ந்து, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி, மூட்டுவலி, கை, கால்களில் வலி ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின்-சி மிக மிக அவசியம்.

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்...

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்…

கீழே விழுந்து அடிபட்டதால் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட காயம் என எல்லா வகையான காயங்களையும் ஆற்றுவதில் வைட்டமின் சி முக்கியமானது.

 இந்திய மக்கள் தொகையில் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம். குழந்தைகள் மற்றும் கருவுறும் வயதில் இருப்போர் இந்தப் பிரச்னைக்கு எளிதில் ஆளாகிறார்கள். டீன் ஏஜில் இருக்கும் பெண்களும் பீரியட்ஸில் ஏற்படும் ரத்த இழப்பு காரணமாக அனீமியா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com