உடல் பருமன் தான் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. எல்லோரும் எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என்ற தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி எடை குறைத்தால் கூட அது ஆரோக்கியமான வழியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் மீண்டும் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே ஆரோக்கியமான முறையில் எடை குறைப்பது மற்றும் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்வது, தொப்பையை குறைப்பது உள்ளிட்டவற்றுக்கு, உணவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
எடை குறைக்கும் முயற்சியோ அல்லது எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியோ, பச்சை காய்கறிகள், பழங்கள், இயற்கை உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டுமென்று பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள். அதே நேரத்தில் உங்கள் தொப்பையை கரைக்கவும் நீங்கள் விரும்பிய அளவுக்கு எடையை குறைக்கவும் இறைச்சியை சாப்பிடலாம்.

இறைச்சியில் அதிக கலோரிகள் உள்ளன, அதேபோல மாமிசத்தை சாப்பிடும் போது அதில் கொலஸ்ட்ரால், கொழுப்பு என்று உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிதாக மாறுகின்றன. ஆனால் லீன் மீட் என்று கூறப்படும் அதிக புரோட்டீன் மற்றும் குறைவான கொழுப்பு கொண்ட இறைச்சியை சாப்பிட்டு வந்தால் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் உடலும் ஆரோக்கியமாகும். எனவே உங்கள் எடை குறைக்கும் முயற்சியில், உணவுகளில் லீன் மீட்டி எவ்வாறு சேர்க்கலாம் என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
லீன் ‘கட்’ வாங்கவும் :
பொதுவாக சிக்கன் அல்லது மட்டன் வாங்க செல்லும் போது, அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக வெட்டப்பட்டிருக்கும் இறைச்சியை பிடிக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் பிரெஸ்ட், ஒரு சிலருக்கு கோழிக்கால் உள்ளிட்டவை பிடிக்கும். நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, இதற்காகவே பிரத்தியேகமாக லீன் கட்ஸ் கொண்ட இறைச்சியை வாங்கலாம். இதில் ஸ்கின்லெஸ் போல்டரி, டர்க்கி, சிக்கன் பிரெஸ்ட், மட்டன் லோயின் மற்றும் லோயின், ரவுண்ட் உள்ளிட்ட லேபிள்கள் இருப்பவற்றை பார்த்து வாங்குங்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் இறைச்சிகளில் குறைவான கொழுப்பு உள்ளது.
அளவாக சாப்பிடுங்கள் :
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் கூட குறிப்பிட்ட அதிகளவு சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும். எனவே லீன் மீட்டிப் பொறுத்தவரை இதில் புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. உடலுக்கு மிக மிக அவசியமான அதே நேரத்தில், அதிகமான புரதச்சத்தும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே புரதச்சத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். நீங்கள் அதிக அளவுக்கு இறைச்சி சாப்பிடும் போது அதிக கலோரிகள் உட்கொள்ளக்கூடும், இதனால் எடை குறையாது.
எப்படி சமைக்கிறீர்கள் என்பது முக்கியம் :
லீன் மீட்டில் அதிக புரதமும் குறைவான கொழுப்பும் தான் இருக்கிறதெ, அதனால் எனக்கு பிடித்தது போல நான் இதை எண்ணெய்யில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுகிறேன் என்று சாப்பிட்டால் அதற்குரிய முழு பலன் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே நீங்கள் லீன் மீட்டி எவ்வாறு சமைக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் அது எவ்வளவு ஆரோக்கியமானது, எவ்வளவு சத்து நிறைந்தது என்பது மாறும். எண்ணெய்யில் போட்டு பொரிக்காமல், இறைச்சியை வேக வைத்து லேசான எண்ணெய் வைத்து வறுக்கலாம், பேக்கிங் செய்யலாம் அல்லது கிரில் செய்து சாப்பிடலாம். இவை ஆரோக்கியமாக இருக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும், எடையும் குறைய உதவும்.
கண்களுக்குத் தெரியும் கொழுப்பை நீக்கவும் :
நீங்கள் இறைச்சியை சமைக்கும் பொழுது, இறைச்சியின் மேலே கொழுப்பு அப்படியே மிதந்து மிதந்து வரும். எனவே கண்களுக்கு தெரியும் கொழுப்பை நீங்கள் உணவில் இருந்து நீக்குங்கள். இதனால் புரதம் அப்படியே இருக்கும்.
Also Read | தினமும் சிக்கன் சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? கவனமாக இருங்கள்…
லீன் மீட் மட்டும் அல்லாமல், தினமும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளையும் உணவில் சேர்த்து வருவது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் எடையை சரியாக நிர்வகிக்கவும் உதவும். ஊட்டச்சத்து நிறைந்த பேலன்ஸ்டு டயட் மற்றும் தினசரி குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது உடல் ரீதியான செயல்பாடுகள் ஆகியவை ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க உதவும். ஒவ்வொரு நபரின் விருப்பமும், தேவையும் மாறுபடும் எனவே உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல உங்கள் உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.